OUR CLIENTS
கஜா புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி வழக்கு!
கஜா புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி வழக்கு! Posted on 21-Nov-2018 கஜா புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி வழக்கு!

மதுரை, நவ.21-

கஜா புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் அழகுமணி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க கோரியும் முறையீடு செய்தார்.
கஜா புயல் பாதிப்பு குறித்து வழக்கறிஞர் அழகுமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், 
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். 
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம், காயமடைந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மின்வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், பிற்பகலில் இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Label