OUR CLIENTS
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சபரிமலையை அயோத்தியாக்க அனுமதி அளிக்க மாட்டேன் முதல்வர் பினராயி விஜயன் ஆவேசம்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சபரிமலையை அயோத்தியாக்க அனுமதி அளிக்க மாட்டேன் முதல்வர் பினராயி விஜயன் ஆவேசம் Posted on 21-Nov-2018 ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சபரிமலையை அயோத்தியாக்க அனுமதி அளிக்க மாட்டேன் முதல்வர் பினராயி விஜயன் ஆவேசம்

திருவனந்தபுரம், நவ.21-

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சபரிமலையை அயோத்தியாக்க அனுமதிக்க மாட்டேன் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆவேசமாக கூறியுள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பாரதீய ஜனதா கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து கோவிலுக்கு வந்த சில பெண்கள் பாதுகாப்பு கருதி போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர். இருந்தபோதிலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவதில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிதமாக செய்துள்ளது. ஞாயிறு அன்று இரவு கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியேறிய பக்தர்களை போலீஸ் கைது செய்தது போராட்டக்காரர்களை மேலும் கோபம் அடைய செய்துள்ளது. 
இரவு நேரத்தில் மலையைவிட்டு இறங்க வாய்ப்பு கிடையாது என பக்தர்கள் கூறியதும் போலீஸ் கட்டாயப்படுத்தியுள்ளது. இருதரப்பு இடையிலான வாக்குவாதாம் முற்றியது. இதனையடுத்து போலீஸ் சிலரை வலுக்கட்டயமாக இழே இறக்க முயற்சி செய்தது. இதனையடுத்து மோதல் முற்றவும் 70 பக்தர்களை போலீஸ் கைது செய்தது. "ஓய்வெடுக்கும் பந்தல் பகுதியில் நின்ற அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பிரச்சனையை ஏற்படுத்த வந்த சங்பரிவார் உறுப்பினர்கள் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். ஆள்சேர்க்க உதவுகிறீர்கள்," என பினராயி விஜயன் அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சபரிமலையை அயோத்தியாக்க அனுமதிக்க மாட்டேன் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆவேசமாக கூறியுள்ளார்
"சங்பரிவார் அமைப்பு சபரிமலையை மற்றொரு அயோத்தியாக மாற்ற முயற்சிப்பதை அனுமதிக்க மாட்டேன். சபரிமலை விவகாரத்தை வைத்து மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த ஸ்திரமான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பா.ஜனதா தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சுயநலத்திற்காக சபரிமலை கோவிலுக்கு முன்னதாக நிற்கிறார்கள். அவர்கள் சபரிமலையில் பிரச்சனையை ஏற்படுத்த அரசு அனுமதிக்காது," என்று கூறியுள்ளார் பினராய் விஜயன். ஞாயிறு அன்று கோவிலில் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையை ஆதரித்துள்ள பினராய் விஜயன், கோவிலில் பிரச்சனையை ஏற்படுத்த துடிப்பவர்களை சோதனையிட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். 

Label