OUR CLIENTS
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு Posted on 21-Nov-2018 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது.
 இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது முத்திரை பதிக்க கூடியவர்கள்.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி இந்தியாவை வீழ்த்தும் வேட்கையில் உள்ளது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், கிறிஸ் லின் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், நாதன் கவுல்டர் நைல், ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.
ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி சமீப காலங்களில் தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால் இந்திய வீரர்கள் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி பெறலாம்.
வீரர்கள் விவரம்:-
இந்தியா:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கிறிஸ் லின், மேக்ஸ்வெல், டி'ஆர்கி ஷார்ட், அலெக்ஸ் கேரி, பென்மெக்டர்மட், ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரிவ் டை, ஆடம் ஜம்பா, பெரென்டோர்ப், ஸ்டேன்லேக்.

Label