OUR CLIENTS
ரஜினி ரூ. 50 லட்சம் நிவாரண நிதி மக்கள் மன்றத்தின் மூலம் நேரடியாக வழங்க ஏற்பாடு
ரஜினி ரூ. 50 லட்சம் நிவாரண நிதி மக்கள் மன்றத்தின் மூலம் நேரடியாக வழங்க ஏற்பாடு Posted on 21-Nov-2018 ரஜினி ரூ. 50 லட்சம் நிவாரண நிதி மக்கள் மன்றத்தின் மூலம் நேரடியாக வழங்க ஏற்பாடு

சென்னை, நவ.21-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க ரஜினி உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்,  புதுக்கோட்டை, திருச்சி,  போன்ற மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந் துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.
கஜா புயலால் பாதிக்கப் பட்டவர்கள் துயரத்திலிருந்து மீண்டுவர பலரும் உதவிகளைச் செய்ய வேண்டுமென முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வரின் கஜா புயல் நிவாரண நிதிக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கு எண் கீழே தரப்பட்டுள்ளது.
சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகிய சிவக்குமார் குடும்பத்தினர், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ரஜினிகாந்த், விஜய், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கஜா புயலுக்கு நிவாரண உதவிக்கான நிதியை அளிப்பதாக அறிவித்துள்ளனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கவுள்ளார். இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களைத் தன்னுடைய ரசிகர் மன்றத்தினர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு சேர்த்துள்ளார். மேலும் முதல்வர் நிவாரண நிதிக்கு அவர் ரூ.10 லட்சம் வழங்கவுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். "சார்ஜிங் லைட்' உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் களைத் தருவதுடன், மரங்களை இழந்தவர்களின் தோப்புகள் புனரமைக் கப்பட்டு, அவர்களுக்கு தென்னை, மா, பலா கன்றுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த உதவிகள், விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர் மூலம் தேவைப்படுவோருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர் ரூ. 10 லட்சம் நிவாரண உதவி நிதி அளித்துள்ளார். நிவாரண நிதியை ஆன்லைன் மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள ட்வீட்களில் தெரிவிக்கப் பட்டுள்ள தகவல்கள்: நம் அன்புத் தலைவர் ரஜினிகாந்த் தன்னுடைய சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களைப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மூலமாக நேரடியாக வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தலைவரின் விருப்பப்படி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங் களுக்கு இன்று அனுப்பப்படும். நிவாரணப் பொருள்களை மன்றக் காவலர்கள் மூலமாக பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஒப்படைத்த நம் அன்புத் தலைவருக்கு நன்றி என்று கூறப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் மூலம் கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ. 40 லட்சம் அளித்துள்ளார் நடிகர் விஜய்.

Label