OUR CLIENTS
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்!
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்! Posted on 21-Nov-2018 விழுப்புரம் பேருந்து நிலையத்தில் குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்!

விழுப்புரம், நவ.21-

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டிக்கு அருகில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீர் குடிநீருடன் கலந்து வருவதால் நோய்கள் பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் நகராட்சி பராமரிககும் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை தேவைகள் முறையின்றி உள்ளன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் குடிநீருக்கே பயணிகள் அலைந்து திரிய வேண்டியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அடுத்தாற்போல தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையம் என்ற பெயரை விழுப்புரம் பெருகிறது. இதற்கு காரணம் அப்போதைய விழுப்புரம் தொகுதியின் திமுக அமைச்சரும், இப்போதைய திருக்கோயிலூர் தொகுதியின் திமுக எம்எல்ஏவுமான க.பொன்முடி என்பதை யாரும் மறந்துவிட முடியாது. 
இந்த பேருந்து நிலையத்தை மறைந்த திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருக்கரங்களால் திறக்கச் செய்தார் பொன்முடி. இப்படி பல சிறப்புகள் பெற்ற வழுதரெட்டி ஏரியை  அழகு மிளிரச் செய்த அசுர சாதனை படைத்தவர் பொன்முடி. இப்படி புதுப்பொலிவுடன் இருந்த பேருந்து நிலையத்தை விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்கவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் திமுக நகர மன்றத்தலைவராக இருந்த இரா.ஜனகராஜ் பணியாற்றிய காலத்தில் விழுப்புரம் நகரம் செழிப்பாக காணப்பட்டது. இதற்கு பிறகு நகரமன்ற தலைவராக வந்த பாஸ்கரன் பணியாற்றிய காலத்தில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் விழுப்புரத்தில் இன்று புதிய பேருந்து நிலையத்தின் அவல நிலையை சொல்லி மாளாது. அந்த அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதில் ஒரு பிரச்னைதான் குடி;நீருடன் கழிவுநீர் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டிய நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் அவர்களது வேலையை பார்த்து கொண்டு அலட்சியப் போக்கில் செயல்படுகிறது. புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை என்று சொல்லப்படுகிறது. இப்படி நகராட்சி நிர்வாகம் செயல்படுவது உகந்ததல்ல என்று இங்குள்ள வியாபாரிகள் தரப்பில் கதை கதையாக சொல்கின்றனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சென்னைக்கு அடுத்துள்ள மிகப் பெரிய பேருந்து நிலையம் என்ற பெயரை இழந்துவிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து நிர்வாகம் மாறினால் மட்டுமே இதற்கு விடிவு பிறக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்த பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது தொடர்ந்து இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label