OUR CLIENTS
பன்றி காய்ச்சலின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக செயல்படும் சுகாதாரத்துறை!
பன்றி காய்ச்சலின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக செயல்படும் சுகாதாரத்துறை! Posted on 21-Nov-2018 பன்றி காய்ச்சலின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக செயல்படும் சுகாதாரத்துறை!

திருநெல்வேலி, நவ.21-
பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர் பலியானார். இது எப்படி சாத்தியம் என்பது பலருக்கும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
பன்றிக்காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியம் செய்வது. அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்தால் சுகாதாரத்துறைக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்பதால் முடிந்தவரை புறநோயாளியாக 
அனுப்பிவிடுவதில் மட்டுமே குறியாக செயல்படும் மருத்துவர்கள் உள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டவேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். 
பன்றிக்காய்ச்சுல் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ள நோயாளிகள்கூட நோயின் பாதிப்பை எளிதில் உணரமுடியும்போது மருத்துவர்கள் ரத்த பரிசோதனை முடிவு வந்தால்தான் நோய்பாதிப்பை கண்டறியமுடியும் என்று கூறி நோயாளிகளை வீட்டிற்கு திருப்பி அனுப்பி விடுகின்றனர். ரத்தப் பரிசோதனை முடிவு கிடைப்பதற்கு 3 நாட்கள் ஆகும். அதற்குள் நோய்கிருமி தனது தாக்குதலில் 50%த்தை தாண்டிவிடுகிறது.
நோய் அறிகுறி உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க வரும் நோயாளிகளின் நிலமை பரிதாபமாக உள்ளது. பன்றிக்காய்ச்சல் தாக்குதலின் எளிய முதல் அறிகுறிகளில் முக்கியமானது மூச்சுத்திணறல். தலைவலி, படபடப்பு, இத்தனை அறிகுறிகளுடன் நோய் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க கோரி சென்றால் அவர்கள் சாதாரண காய்ச்சல் நோயாளிகள் நிற்கும் வரிசையில் நின்று தங்கள் முறை வரும் போதுதான் காண்பிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. 
இதற்கென தனிப்பட்ட சிறப்பு கவுன்டர்கள் இல்லை. பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளை முதல் நாளில் எளிதில் கண்டறியும் நிலையில் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. பன்றிக்காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதியில்லை என்று அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர். அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு ஆலோசனை மற்றும் உள்நோயாளியாக சிகிச்சை பெறவேண்டுமா? அல்லது புறநோயயாளிகளாக சிகிச்சை பெறவேண்டுமா? என்பது குறித்து ஆலோசனை வழங்குபவர்கள் பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே. வேறு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் எவரும் பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் கிடையாது. பயிற்சி மருத்துவர்கள், அவர்களும் நோயின் தீவிரத்தை கண்டுகொள்வது இல்லை. உள்நோயாளியாக அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாக உள்ளது.
பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் உள்ள நோயாளிகளின் முக்கியமான அறிகுறி மூச்சுத்திணறல், தலைவலி, வாந்தி, கால் கைகளில் நீர்கோர்த்து வீக்கம். இத்தனை சிரமத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்றுவிடலாம் என்று நீண்ட வரிசையில் சாதாரண காய்ச்சல் நோயாளிகளுடன் காத்திருக்கையில் மனதளவில் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதற்கிடையில் வரிசையில் நிற்கும் நோயாளிகளும் பன்றிக்காய்ச்சல் நோய் தொற்றுக்கு ஆளாக வாய்ப்பு ஏற்படுகிறது. இதன்பிறகு பன்றிக்காய்சலுக்கான 2 நாள் மாத்திரைகளை மட்டும் கொடுத்து  புள்ளி விபரக்கணக்கில் வராதவாறு புறநோயாளிகளாக துரத்தப்படுகிறார்கள் அப்பாவி பொதுமக்கள். 
இதற்கிடையியில் பின்னணியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் உடல்நிலையில் நடைபெறும் மாற்றங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.  பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தொடங்கிய முதல்நாளில் இருந்தே மறைமுக பாதிப்புக்கள் தொடங்கிவிடுகிறது. முதல் பாதிப்பாக சிறுநீரகத்தை குறிவைக்கும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை தடுமாறச் செய்கிறது. இதனால் 2வது நாளிலே உடல் முழுவதும் நீர்கோர்த்து நுரையீரல்வரை வந்து மூச்சுதினறல் ஏற்ப்படுகிறது. அடுத்த கட்டமாகு பன்றிக்காய்ச்சல் வைரஸ் தனது கோரப்பிடியை இதயத்தை நோக்கி நகர்த்துகிறது. எவ்வளவு சீரான இதயமாக இருந்தாலும் அதன் இயக்க அளவை 30% வரையில் குறைத்துவிடுகிறது. இந்த நிலையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் பன்றிக்காய்ச்சல் நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சென்று சிகிச்சை எடுக்கலாம் என்றால் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் தான் மீண்டும் அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் உள்நோயாளியாக சிகிச்சை பெற வந்து சேருகின்றனர். புள்ளிவிபர பீதியில் இருக்கும் அரசு மருத்துவமனையும்,  சுகாதாரத்துறையும் ஆலோசனை செய்து நோயாளியை அனுமதி செய்து சிகிச்சையை தொடங்கும் முன்பு மருத்துவமனைக்கு வந்த 2 மணிநேரத்தில் உயிரிழப்பு என செய்தி வெளியிடும் மருத்துவ தோழர்கள் அதையும் பொருட்படுத்தாமல் பணியாற்றுகின்றனர். உண்மையில் நோய் தாக்கம் தெரிந்தும், புள்ளி விபரங்களுக்கு பயந்து அரசு மருத்துவமனையும், சுகாதாரத்துறையும் சேர்ந்து பன்றிக்காய்ச்சல் நோயாளிகளின் மீது நடத்தும் நேரடிதாக்குதல் இவர்களது அலட்சியத்தால் 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு நிருபரின் நிகழ்வே இதற்கு சாட்சி. புள்ளிவிபரங்களுக்காக நோயாளிகளை திட்டமிட்டு பலிகொடுக்கும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. இதை சுகாதரத்துறையும், அமைச்சர் விஜயபாஸ்கரும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் முதல் ஊழியர்கள் வரை தெளிவுபடுத்த வேண்டும் என்பதை பொதுமக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக உள்ளது. 

Label