OUR CLIENTS
மயானம் செல்ல பாதையில்லை குளத்துக்குள் கடக்கும் அவலம்!
மயானம் செல்ல பாதையில்லை குளத்துக்குள் கடக்கும் அவலம்! Posted on 21-Nov-2018 மயானம் செல்ல பாதையில்லை குளத்துக்குள் கடக்கும் அவலம்!

அவிநாசி, நவ.21-

அவிநாசி அருகே மயானத்துக்கு செல்ல பாதை வசதியில்லா ததால் குளத்துக்குள் உடலை சுமந்து செல்ல வேண்டி யுள்ளதாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள ராமியம்பாளையம், ஏ.டி., காலனியில் 140 குடும்பத்தினர் வசிக்கின்றனர். காலனிக்கு ஒதுக்கப்பட்ட மயானம் சூரிபாளையம் குளத்தின் கரையில் உள்ளது. இரு மாதங்களுக்கு முன் பெய்த மழையால் குளம் நிரம்பியது.இந்நிலையில் காலனியைச் சேர்ந்த சதீஷ்(29), என்பவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் குளத்தின் வழியே சுமந்து சென்றனர். பாதை வசதி இல்லாத நிலையில் குளத்தில் நீர்வரத்து அதிகரித்திருந்தால் மிகவும் சிரமம் எனவும் வருத்தம் தெரிவித்தனர்.இப்பகுதியினர் கூறியதாவது:பல ஆண்டுகளாகவே மயானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி கிடையாது. மயானத்துக்கு வேறிடம் ஒதுக்க வேண்டும் அல்லது குளத்தின் கரையை பலப்படுத்தி, பாதை வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பி.டி.ஓ., சாந்திலட்சுமியிடம் கேட்டபோது குளக்கரையை பலப்படுத்தி பாதை அமைத்து கொடுக்கப்படும் என்றார்.

Label