OUR CLIENTS
மழையால் ஆட்டம் 17 ஓவராக குறைப்பு: ஆஸ்திரேலியா 158- இந்தியாவிற்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு
மழையால் ஆட்டம் 17 ஓவராக குறைப்பு: ஆஸ்திரேலியா 158- இந்தியாவிற்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு Posted on 21-Nov-2018 மழையால் ஆட்டம் 17 ஓவராக குறைப்பு: ஆஸ்திரேலியா 158- இந்தியாவிற்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு

மழையால் ஆட்டம் 17 ஓவராக குறைப்பு: ஆஸ்திரேலியா 158- இந்தியாவிற்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
மேக்ஸ்வெல் 24 பந்தில் 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.
ஆஸ்திரேலியா 158 ரன்கள் எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Label