OUR CLIENTS
வேலூர் மாவட்டத்தில் விதிமீறிய 31,631 வாகன ஓட்டுனரின் உரிமம் ரத்து!
வேலூர் மாவட்டத்தில் விதிமீறிய 31,631 வாகன ஓட்டுனரின் உரிமம் ரத்து! Posted on 22-Nov-2018 வேலூர் மாவட்டத்தில் விதிமீறிய 31,631 வாகன ஓட்டுனரின் உரிமம் ரத்து!

வேலூர், நவ.22-
வேலூர் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் விதிமீறிய 31,631 வாகன ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக 1.66 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. வாகன விபத்துக்களை குறைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கேட்-ஐ-ரிப்ளக்டர்கள், பேரிகார்டுகள் என்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் அந்தந்த எல்லைக்குட்பட்ட போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

கடந்த 11 மாதங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 1,443 பேர், சிவப்பு விளக்கில் நிற்காமல் சென்ற 1,739 பேர், செல்போன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டியவர்கள் 24,119 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 6,603 பேர், அதிக சரக்கு ஏற்றிய 2,573 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிய 10,217 பேர், தலைக்கவசம் அணியாத 98,866 பேர், சீட் பெல்ட் அணியாத 21,077 பேர் என மொத்தம் 1.66 லட்சம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 31,631 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் விதிமீறிய 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 252 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Label