OUR CLIENTS
கோவை, சேலத்துக்கு வீடுதேடி வருது காஸ்: அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
கோவை, சேலத்துக்கு வீடுதேடி வருது காஸ்: அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி Posted on 23-Nov-2018 கோவை, சேலத்துக்கு வீடுதேடி வருது காஸ்: அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

புதுடில்லி:-

கோவை, சேலம் உள்பட 129  மாவட்டங்களில் வீடுகளுக்கே நேரடியாக சமையல் காஸ் இணைப்பு வழங்கும் நகர எரிவாயு திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
வீட்டு சமையல் அறைக்கே  நேரடியாக குழாய் மூலம் சமையல் காஸ் சப்ளை செய்யும் திட்டம்  சில நகரங்களில் மட்டுமே தற்போது  நடைமுறையில் உள்ளது. இதை  நாடுமுழுவதும் 18 மாநிலங்களில் 129 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா டில்லியில்  நேற்று நடந்தது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நமது நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியமான படி. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரிசக்தி தயாரிப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக வாகனங்களுக்கு மட்டுமின்றி சமையல் எரிவாயுவும் குழாய் மூலம் நேரடியாக வீட்டு சமையல் அறைக்கே வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு வரை 66 மாவட்டங்களில் மட்டுமே குழாய் மூலம்  சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது. தற்போது 174 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில்  400 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.  அப்போது 70 சதவீத மக்கள் இதனால் பயன் அடைவார்கள். தற்போது 32 லட்சம் வீடுகளுக்கு சமையல் காஸ் நேரடியாக வழங்கப்படுகிறது. இந்ததிட்டம் செயல்படுத்தப்பட்டால்2 கோடி வீடுகளுக்கு நேரடியாக வீடுதேடி காஸ் வழங்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நகர எரிவாயு திட்டம் தமிழகத்தில்  காஞ்சிபுரம், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.  முதல்கட்டமாக சேலம், கோவை நகரங்கள்  இதன் மூலம் பயன் அடைகின்றன.

Label