OUR CLIENTS
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட மத்திய குழு இன்று வருகை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட மத்திய குழு இன்று வருகை Posted on 23-Nov-2018 கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட மத்திய குழு இன்று வருகை

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று தமிழகம் வர உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
டெல்லியில் நேற்று பிரதமர் இல்லத்தில், மோடியைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர், கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை விரிவாக எடுத்துரைத்தார். கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அதில் 1500 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதிப்புகளை பிரதமர் பார்வையிட கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் முழுமையாக பார்வையிட வேண்டும் என்பதற்காகவே கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சாலை மார்க்கமாக செல்லாமல், ஹெலிகாப்டரில் சென்றதாக முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
டெல்லியில் இருந்து தமிழகம் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று தமிழகம் வர உள்ளதாக தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்றும் முதலமைச்சர் கூறினார்.

Label