OUR CLIENTS
புயலில் சாய்ந்த தென்னைக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
புயலில் சாய்ந்த தென்னைக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு Posted on 23-Nov-2018 புயலில் சாய்ந்த தென்னைக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

புயலால் சேதமடைந்த ஒரு தென்னைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலூர் வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரக் கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், கஜாபுயலால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 30 இலட்ச ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்ககோரியுள்ளார். காயமடைந்தோருக்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியுள்ளார்.
புயலில் சாய்ந்த ஒரு தென்னைக்கு ஐம்பதாயிரம் ரூபாய், நெல்லுக்கு ஏக்கருக்கு ஐம்பதாயிரம் ரூபாய், வாழைக்கு ஏக்கருக்கு 2 இலட்சம் ரூபாய் என்கிற கணக்கில் இழப்பீடு வழங்கவும் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எட்டுவழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தத் தென்னைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்குவதாகத் தமிழக அரசு தெரிவித்ததை மனுதாரர் குறிப்பிட்டு, புயலால் பாதிக்கப்பட்ட தென்னைக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார். இது குறித்துத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Label