OUR CLIENTS
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கொட்டும் மழைக்கிடையே குடைகளை பிடித்துக்கொண்டு கிரிவலம்
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கொட்டும் மழைக்கிடையே குடைகளை பிடித்துக்கொண்டு கிரிவலம் Posted on 23-Nov-2018 கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கொட்டும் மழைக்கிடையே குடைகளை பிடித்துக்கொண்டு கிரிவலம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட இருப்பதை முன்னிட்டு அங்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உண்ணாமுலையம்மன் உட்பட அனைத்து சன்னதிகளிலும் பரணி தீபம் ஏற்றபட்டது. இதில் ஏராளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை அண்ணாமலையார் கோவிலின் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அ உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் கொட்டும் மழைக்கிடையே குடைகளை பிடித்துக்கொண்டு கிரிவலம் வருகின்றனர். கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Label