OUR CLIENTS
தனியார் பல்கலைக்கழகத்தில் அத்துமீறிய லிஃப்ட் ஆப்பரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் போராட்டம்
தனியார் பல்கலைக்கழகத்தில் அத்துமீறிய லிஃப்ட் ஆப்பரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் போராட்டம் Posted on 23-Nov-2018 தனியார் பல்கலைக்கழகத்தில் அத்துமீறிய லிஃப்ட் ஆப்பரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் போராட்டம்

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் ஆபாசமாக நடந்து பாலியல் தொல்லை கொடுத்த லிஃப்ட் ஆப்பரேட்டர் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தின் ஹாஸ்டலில் உள்ள லிஃப்டை மாணவி ஒருவர் நேற்று மாலை பயன்படுத்தியபோது, அந்த மாணவி முன்னிலையில் லிஃப்ட் ஆபரேட்டர்  மிகவும் ஆபாசமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் தோட்டக்காரராகவும், துப்புரவு பணியாளராகவும் லிஃப்ட் ஆபரேட்டராகவும் பணிபுரிந்து வருவதாகக் சொல்லப்படுகிறது. லிஃப்டில் மாணவி முன்னிலையில் மிகவும் ஆபாசமாக நடந்துகொண்ட அர்ஜூன் என்ற அந்த நபர் பற்றி புகார் கூறியபோது, முறையாக உடை அணிந்தால் ஏன் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறப்போகிறது என வார்டன் கேள்வி எழுப்பியதாக மாணவிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இதையடுத்து ஆபாசமாக நடந்துகொண்ட பணியாளர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகக் குற்றம்சாட்டி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். முழக்கங்களை எழுப்பியபடி, தடுப்புகளை அகற்றிவிட்டு பல்கலைக்கழக வளாகத்தை நோக்கி மாணவிகள் முன்னேறும்  காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இதனிடையே, பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரான அர்ஜூனை, மறைமலை நகர் போலீசார், 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Label