OUR CLIENTS
நாகை மாவட்டத்தில் 980 ஊர்களில் 2863 கைப்பம்புகள் அமைக்கப்படும் - SP வேலுமணி
நாகை மாவட்டத்தில் 980 ஊர்களில் 2863 கைப்பம்புகள் அமைக்கப்படும் - SP வேலுமணி Posted on 23-Nov-2018 நாகை மாவட்டத்தில் 980 ஊர்களில் 2863 கைப்பம்புகள் அமைக்கப்படும் - SP வேலுமணி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீரான குடிநீர் வழங்க 980 ஊர்களில் 2863 கைப்பம்புகள் அமைக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பாலையூரில் 7 இலட்ச ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்ததைக் குறிப்பிட்டுள்ளது.
நாகப்பட்டினம், கீழையூர், கீழ்வேளுர், திருமருகல், தலைஞாயிறு, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியங்களில் 198ஊராட்சிகளில் 980ஊர்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த ஊர்களில் மொத்தம் 2கோடியே 41இலட்ச ரூபாய் மதிப்பில் 2863 கைப்பம்புகள் அமைக்க அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Label