OUR CLIENTS
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆந்திர முதல்வராவேன் நடிகர் பவன் கல்யாண்!
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆந்திர முதல்வராவேன் நடிகர் பவன் கல்யாண்! Posted on 23-Nov-2018 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆந்திர முதல்வராவேன் நடிகர் பவன் கல்யாண்!

சென்னை, நவ.23-

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாண் ஆந்திராவில் 2019 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அம்மாநிலத்தின் முதல்வராவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், கடந்த 2014-ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நாடுமுழுவதற்குமான தனது அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னையில் அவர் தொடங்கினார். 
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நம் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்திய மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. தென்மாநிலங்களில் இருக்கும் மக்களின் உரிமைகள் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் மக்களுக்கு தங்களது பணிகளை அர்ப்பணிக் கும் அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக எனது அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னையில் தொடங்கியுள்ளேன். விரைவில் மற்ற மாநிலங்களிலும் கூட்டங்கள் நடத்துவேன். அதன் பிறகு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவேன்.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட் டது. தற்போது அவர் 3-வது அணி அமைக்க அரசியல் கட்சி தலைவர் களை சந்தித்து வருவது சந்தர்ப்பவாத அரசியலாகும். 2019-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தனித்து போட்டியிடுவேன். மேலும், அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடக் கும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான் முதல்வரா வேன். அதன்பிறகு, தென்மாநிலங் களை ஒருங்கிணைக்கும் முயற்சி யில் ஈடுபடுவேன். தமிழகத்தில் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு என் தேவை ஏற்பட்டால், நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.

Label