OUR CLIENTS
விழுப்புரம் நீதிமன்ற கட்டடம் கட்டுமான பணி மந்தநிலை!
விழுப்புரம் நீதிமன்ற கட்டடம் கட்டுமான பணி மந்தநிலை! Posted on 23-Nov-2018 விழுப்புரம் நீதிமன்ற கட்டடம் கட்டுமான பணி மந்தநிலை!

விழுப்புரம், நவ.23-

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகதத்தில் கூடுதல் கட்டடங்கள் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகள் மந்தநிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டினாற் போன்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த பகுதியில் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகள் மந்தநிலையில் உள்ளது. குறிப்பாக மணலை பயன்படுத்தி கட்டடம் கட்டப்படவில்லை. 
விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தொகுதியில் நீதிமன்ற கட்டுமானப் பணிகள் மணல் கொண்டு கட்டப்படவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் எம்.சாண்ட் கொண்டு கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறைந்து காணப்படுவதாக விழுப்புரம் நகர சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். நீண்ட காலத்துக்கு இந்த கட்டடம் நீடித்து நிலைத்து நிற்குமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. டெண்டர் எடுத்தவர் மணல் பயன்படுத்தாமல் எம்.சாண்ட் பயன்படுத்துவதற்கு பலர் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மணல் பயன்படுத்தி கட்டடம் கட்டப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label