OUR CLIENTS
சந்திரபாபு நாயுடு ஒரு மன நோயாளி: சந்திரசேகர் ராவ் விமர்சனம்
சந்திரபாபு நாயுடு ஒரு மன நோயாளி: சந்திரசேகர் ராவ் விமர்சனம் Posted on 26-Nov-2018 சந்திரபாபு நாயுடு ஒரு மன நோயாளி: சந்திரசேகர் ராவ் விமர்சனம்

ஐதராபாத்:-   

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு மன நோயாளி என்று விகாராபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தெலுங்கானாவில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விகாராபாத் மாவட்டத்தின் பார்கி பகுதியில் நேற்று நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் காபந்து முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதில் பேசிய அவர், ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மிகவும் கடுமையாக விமர்சித்தார். ”சந்திரபாபு நாயுடு ஒரு மனநோயாளி என நான் கூறுகிறேன். ஏனெனில் ஒருமுறை அவர், காடுகளை பாதுகாப்பதற்காக ஆடுகளுக்கு தடை விதிப்பேன் என்று கூறினார். ஆனால் ஆட்டினம் எப்போது தோன்றியது? அவர் எப்போது பிறந்தார்? இயற்கையின் படைப்பை தடை செய்வதற்கு நீங்கள் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,”ஐதராபாத்தை உலக வரைபடத்தில் சேர்ப்பதற்கு அவர் ஒரு கருவியாக இருந்ததாக கூறியிருக்கிறார். இந்த மனிதரை என்ன செய்வது? அவ்வளவு திறமை பெற்றவராக இருந்தால், அமராவதியை கட்டமைப்பதில் ஏன் தோல்வியுற்றார்? வெறும் கிராபிக்ஸ் மாதிரியை தவிர உண்மையான கட்டிடங்கள் எதுவும் அங்கு அமைக்கப்படவில்லை. இது போன்ற மோசடி பேர்வழிகள் வாக்கு கேட்டு உங்களிடம் வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் கவனமாக இல்லையென்றால் ஏமாற்றப்படுவோம்” என்று சந்திரசேகர் ராவ் விமர்சித்துள்ளார்.
சந்திரசேகர் ராசின் இந்த பேச்சு தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Label