OUR CLIENTS
பள்ளி, கல்லூரிகளில் தொடர் கொள்ளை வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது!
பள்ளி, கல்லூரிகளில் தொடர் கொள்ளை வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது! Posted on 26-Nov-2018 பள்ளி, கல்லூரிகளில் தொடர் கொள்ளை வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது!

திருவண்ணாமலை, நவ.26-

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளில் முகமூடி அணிந்தபடி தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக வேலூர் மாவட்டத்தைச்
சேர்ந்த 3 இளைஞர்களை போலீஸார்  கைது செய்தனர்.
செய்யாறில் உள்ள ஆரணி கூட்டுச்சாலைப் பகுதியில் செய்யாறு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி போலீஸார் விசாரணை மேற்கொண்டர். இதில், அவர்கள் வேலூர் மாவட்டம், பனங்காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி (25), கொத்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (28), ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (25) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் கூட்டாகச் சேர்ந்து செய்யாறு - ஆற்காடு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியும், பாராசூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதியும் முகமூடி அணிந்தபடி காவலர்களை மிரட்டியும், தாக்கியும் பள்ளி, கல்லூரி அலுவலகங்களில் இருந்த ரூ.1.90 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதேபோல, இவர்கள் வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லூரிகளில் மூகமூடி அணிந்து கொள்ளையடித்ததும் தெரியவந்தது. உடனடியாக திருப்பதி, கணேசன், ரமேஷ் ஆகிய மூவரையும் கைது செய்த செய்யாறு போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும், இவர்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 4 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Label