OUR CLIENTS
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரம் Posted on 26-Nov-2018 கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட நகர்ப் பகுதிகளில் மின்விநியோகப் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், பல்வேறு கிராமங்களில் 11வது நாளாக மின் விநியோகம் சீராகவில்லை.
கஜா புயலின் கோரத் தாண்டவத்தால், திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான தென்னை, வாழை, மா உள்பட பல்வேறு மரங்கள் வேருடன் சாய்ந்தன. அதேபோல், பல நூறு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், கரும்பு உள்ளிட்டவையும் நாசமடைந்தன. புயலின் தாக்கத்தால், மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகளும் சேதமடைந்ததால், அவற்றை சீரமைக்கும் பணியில் இரவு-பகலாக, மின்வாரிய ஊழியர்கள் இன்று 11வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
பல கிராமங்களில் இன்னும் மின்விநியோகம் சீராகாததால், அங்கு தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க, மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஜெனரேட்டர் மின்சாரம் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய நகர்ப்பகுதிகளில் 80 சதவீதம் மின்விநியோகம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, புயல் பாதித்த பகுதிகளில், டிசம்பர் மாதத்திற்கான பொருட்களை, இந்த மாதமே விநியோகிக்க ரேஷன் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அதை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

Label