OUR CLIENTS
கல்வெட்டு எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
கல்வெட்டு எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் Posted on 26-Nov-2018 கல்வெட்டு எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

கல்வெட்டு எழுத்தியல் அறிஞரும் தினமணி முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஐராவதம் மகாதேவன் மறைவு பத்திரிகை உலகிற்கும், கல்வெட்டு எழுத்தியல் துறை மற்றும் இலக்கிய துறைக்கும் பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி தமிழ் மாநாட்டில் சிந்து சமவெளி நாகரிக ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து, "பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து சிந்து சமவெளி நாகரிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது" என்ற அவரது ஆய்வினை மேற்கோள்காட்டி கலைஞரால் பாராட்டப்பட்டவர் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் "தொல்காப்பியர்" விருதினைப் பெற்ற ஐராவதம் மகாதேவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஆய்வு அறிஞர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வுகளில் மூலம் சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளுக்கும், தமிழ் எழுத்துகளுக்கும் ஒற்றுமை இருப்பதை சங்ககால இலக்கியங்களின் துணையுடன் நிரூபித்து, சிந்து சமவெளி நாகரிகம் வேதப் பண்பாட்டுக் காலத்துக்கும் முந்தைய திராவிட நாகரிகம் என்பதை நிறுவியவர் ஐராவதம் மகாதேவன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி நாளிதழின் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் இதழியல் அறத்திற்கு உட்பட்டு அந்த நாளிதழை சிறப்பாக நடத்தியவர் என்றும், அனைத்துத் தரப்பு மக்களும் படிக்கும் வகையில், தமிழ் மணக்கும் நாளிதழாக திகழ்வதற்கு அடித்தளம் அமைத்தவர் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். ஐராவதம் மகாதேவன் மறைவு தமிழுக்கும், தொல்லியல் துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என ராமதாஸ், தெரிவித்துள்ளார்.

Label