OUR CLIENTS
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற அகதிகளை கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்த வீரர்கள்
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற அகதிகளை கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்த வீரர்கள் Posted on 26-Nov-2018 சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற அகதிகளை கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்த வீரர்கள்

மெக்சிகோ எல்லை வழியாக நுழைய முயன்ற அகதிகளை, அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.
ஹோண்டுரஸ், பனாமா, கவுதமாலா ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் வன்முறை, வறுமை காரணமாக தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். அவர்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர்.
நேற்று இதுபோல் 500க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் மெக்சிகோ - அமெரிக்கா எல்லையில் உள்ள திஜூவானாவில் திரண்டிருந்தனர். திடீரென அவர்கள் எல்லையில் உள்ள வேலியை தாண்டிச் செல்ல முற்பட்டதால் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி எறிந்து அகதிகளை விரட்டி அடித்தனர். பெண்கள், குழந்தைகள் அலறியடித்தபடி ஓடினர். இதனால் எல்லையில் பதற்றம் சூழ்ந்து கொண்டது.
திஜூவானாவையும், அமெரிக்காவின் சான் டியாகோவையும் இணைக்கும் சான் சிட்ரோ துறைமுகத்திற்கான போக்குவரத்து சில மணி நேரம் தடை செய்யப்பட்டது. திஜூவானாவில் உள்ள இருநாட்டு எல்லை நுழைவு வாயிலும் மூடப்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் தேங்கி நின்றன. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Label