OUR CLIENTS
திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம்மாள் காலமானார்
திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம்மாள் காலமானார் Posted on 26-Nov-2018 திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம்மாள் காலமானார்

சென்னை:-

 மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம்மாள்(82) உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.
பிரபல திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் காலமானார்.
அவரது மறைவால் வாடிய அவரது மனைவி ராஜம்மாள், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவுடன் இருந்துள்ளார். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர் காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 3 மணிக்கு மேல் நடைபெறும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர்.
மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம்மாள் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Label