OUR CLIENTS
சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு
சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு Posted on 26-Nov-2018 சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு

மதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 
விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு மதுரையில் உள்ள திரையரங்குகளில் ஆன்லைனில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முதலில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால், திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
ஆனால் இந்த உத்தரவானது மீறப்பட்டுள்ளதாகவும், சர்காருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில் உத்தரவை மீறிய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கானது நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் சர்கார் படம் வெளியான நவம்பர் 6ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையில் மதுரை மாவட்ட திரையரங்குகளின் தினசரி கட்டண வருவாய் அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Label