OUR CLIENTS
தருமபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி
தருமபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி Posted on 26-Nov-2018 தருமபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி

தருமபுரி:- 

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாய்- மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று பெரியாம்பட்டி அடுத்துள்ள பூனத்தஅள்ளி கிராமத்தை சேர்ந்த காளியம்மாள் (வயது45), இவரது மகள் ராசாத்தி (21) ஆகிய 2 பேர் மனு கொடுக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாய்-மகள் இருவரும் தீக்குளிக்க முயன்றனர்.
இதை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை சமாதானம் செய்து விசாரணை நடத்தினர்.
நான் பெரியாம்பட்டி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது மகள் ராசாத்திக்கு அடிளம் அடுத்துள்ள சிகத்தம அள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான கோவிந்தன் என்பவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தோம். அவர்கள் தனியாக வசித்து குடும்பம் நடத்தி வந்தனர்.
பின்னர் கடந்த சில மாதங்களாக கோவிந்தனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனை ராசாத்தி கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவர் தாய் வீட்டிற்கு அனுப்பினார். இதனால் நான் பலமுறை சென்று தட்டிகேட்டுள்ளேன். ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
இது குறித்து காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்து இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு நானும் எனது மகள் ராசாத்தியும் வந்து தீக்குளிக்க முயன்றோம். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினர். எனது மகள் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன்.,இவ்வாறு அவர் கூறினார்.

Label