OUR CLIENTS
கடற்கரையில் கொல்லப்பட்ட 145 அரிய வகைத் திமிங்கலங்கள்
கடற்கரையில் கொல்லப்பட்ட 145 அரிய வகைத் திமிங்கலங்கள் Posted on 26-Nov-2018 கடற்கரையில் கொல்லப்பட்ட 145 அரிய வகைத் திமிங்கலங்கள்

நியூஸிலாந்தின் ஸ்டூவர்ட் தீவின் கடற்கரையில் 145 அரிய பைலட் வகைத் திமிங்கலங்கள் திங்கள்கிழமை உயிரிழந்தன.
கடற்கரையில் பெரும் திமிங்கலக் கூட்டத்தைக் கண்ட ஒருவர் அதுதொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்த கடல் பாதுகாப்பு அதிகாரிகள் முதல்கட்டமாக சில அரிய பைலட் வகைத் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியதைக் கண்டனர்.
பின்னர் அதிகளவிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவை அனைத்தும் கடும் உடல்நலக் குறைவுடன் மேசமாகக் காணப்பட்டன. அவற்றை கடலுக்கு திருப்புவது இயலாத காரியமாக இருந்ததால், அவைகள் கொல்லப்பட்டன என்று கடல் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் ரென் லெப்பென்ஸ், தங்கள் தரப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தினார். மேலும் ஆண்டொன்றுக்கு இதுபோன்று குறைந்தபட்சம் 85 முறை நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
முன்னதாக, 2017-ஆம் ஆண்டில் கிழக்குத் தீவின் கடற்கரையில் 300-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்ததே நியூஸிலாந்தில் இதுவரை அதிகபட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Label