OUR CLIENTS
பிரதமர் மோடிக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் சவால்
பிரதமர் மோடிக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் சவால் Posted on 27-Nov-2018 பிரதமர் மோடிக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் சவால்

குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக 12 ஆண்டுகள் இருந்த போது, செய்ய முடியாத மேம்பாட்டுப் பணிகளை தில்லியில் கடந்த 3 ஆண்டுகளில் செய்துள்ளோம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.  
ஆம் ஆத்மிக் கட்சியின் 6-ஆம் ஆண்டு நிறுவனர் தினம் தில்லியில் திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. ஐடிஓ தீன தயாள் உபாத்யாய் மார்கில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிறுவனர் தின விழாவில் கேஜரிவால் கலந்து கொண்டு பேசியதாவது:  ஆம் ஆத்மி ஆட்சியில் தில்லி வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. 
தில்லி முதல்வரின் நேர்மை தொடர்பாக தில்லி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால், பிரதமரின் நேர்மை தொடர்பாக நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா?  குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள் பதவி வகித்த போது, மோடியால் அங்கே செய்ய முடியாத மேம்பாட்டுப் பணிகளை வெறும் 3 ஆண்டுகளில் தில்லியில் நாங்கள் செய்துள்ளோம். 
ஊழலுக்கு எதிராக 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட எங்களது பயணம் தொடரும் என்றார் கேஜரிவால்.

Label