OUR CLIENTS
தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி: முதல்வரும், அமைச்சர்களுமே பொறுப்பு - ஸ்டாலின் தாக்கு
தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி: முதல்வரும், அமைச்சர்களுமே பொறுப்பு - ஸ்டாலின் தாக்கு Posted on 27-Nov-2018 தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி: முதல்வரும், அமைச்சர்களுமே பொறுப்பு - ஸ்டாலின் தாக்கு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்பதுடன் இந்த தோல்விக்கு முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்களுமே முழுப் பொறுப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 
ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. மேலும் முன்னாள் நீதிபதி தலைமையில் ஆலையில் ஆய்வு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுகளுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
இது தொடர்பாக திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷஷதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதிப்பது தொடர்பாகவும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஆலையை ஆய்வு செய்யவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் அளவுக்கு, இந்த வழக்கை ஆர்வமின்றி அலட்சியமான முறையில் நடத்திய தமிழக அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்நீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் ஆகிய அனைத்து மன்றங்களிலும் இந்த வழக்கை நடத்திய விதம் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கு நிரந்தர சான்றாவணமாகத் திகழ்கிறது.
 தனியாருக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் துவக்கத்திலிருந்தே அதிமுக அரசு ஒருதலைப் பட்சமாகச் செயல்பட்டு வருகிறது என்பதற்கு அடுக்கடுக்கான உதாரணங்களை எடுத்துக்காட்டிட முடியும். ஜனநாயக ரீதியில் அறவழியில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது, நூறாவது நாளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களைப் பலிவாங்கியது, உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும், பலியானோர் குடும்பத்துக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் வேண்டுமென்றே கால தாமதம் செய்தது, தமிழக அரசின் பிரதிநிதிகளே இல்லாமல் ஓர் ஆய்வுக் குழுவை அமைக்க அனுமதித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழகத்தின் வாதங்களைக் கோட்டை விட்டது என வரிசையாக எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன.
ஒரு வழக்கை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்பதுடன் இந்த தோல்விக்கு முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்களுகமே முழுப் பொறுப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

Label