OUR CLIENTS
சட்டவிரோத கட்டடங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக உத்தரவு
சட்டவிரோத கட்டடங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக உத்தரவு Posted on 27-Nov-2018 சட்டவிரோத கட்டடங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை:- 

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பான வழக்கில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னை வடபழனியில் விதிமீறிய கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, விதிமீறி, சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Label