OUR CLIENTS
உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை 4-வது முறையாக பெற்றது
உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை 4-வது முறையாக பெற்றது Posted on 27-Nov-2018 உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை 4-வது முறையாக பெற்றது

 தமிழகம்:-

உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழகம் 4-வது முறையாக பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்ற விருதை தமிழகம் பெற்றது.
இந்நிலையில் 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழகத்தை சிறந்த மாநிலமாக தேர்வு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் அஸ்வின்குமார் சவுபே, அனுபிரியா பட்டேல் ஆகியோரிடம் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கர் விருதைப் பெற்றார்.
விழாவில் பேசிய அவர், உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கு தமிழகத்தில் மட்டும்தான் அதிகபட்சமாக முதலமைச்சரின் விரிவான  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 35 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுவதாகவும், இதுவரை ஆயிரத்து 198 கொடையாளர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 886 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

Label