OUR CLIENTS
டி20 தரவரிசை: முதல் முறையாக 3-ஆம் இடத்தில் குல்தீப் யாதவ்
டி20 தரவரிசை: முதல் முறையாக 3-ஆம் இடத்தில் குல்தீப் யாதவ் Posted on 27-Nov-2018 டி20 தரவரிசை: முதல் முறையாக 3-ஆம் இடத்தில் குல்தீப் யாதவ்

 ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் பந்துவீச்சாளர்களுக்கான பிரிவில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் முதல் முறையாக முதல் 5 இடங்களுக்குள்ளாக முன்னேறி 3-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில், புதிய டி20 தரவரிசை பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இதன்படி, குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 3-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். கடைசி ஆட்டத்தில் மட்டும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய கிருணால் பாண்டியா 66 இடங்கள் முன்னேறி 98-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா முறையே 19 மற்றும் 21-ஆவது இடத்தில் நீடிக்கின்றனர். ஆஸ்திரேலிய வீரர்களைப் பொருத்த வரையில், ஆடம் ஸம்பா 17 இடங்கள் ஏற்றம் கண்டு 5-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். எனினும், சக வீரர்களான பில்லி ஸ்டான்லேக் 5 இடங்கள் சறுக்கி 14, ஆன்ட்ரூ டை 8 இடங்கள் சறுக்கி 18-ஆவது இடங்களுக்கு வந்துள்ளனர்.
பேட்ஸ்மேன்கள் வரிசையில், இந்திய வீரர் ஷிகர் தவன் 5 இடங்கள் முன்னேறி 11-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். ஆனால், ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் இரு இடங்கள் சறுக்கி முறையே 6 மற்றும் 9-ஆவது இடங்களுக்கு வந்துள்ளனர். கேப்டன் கோலி 14-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஓரிடம் சறுக்கி 3-ஆவது இடத்துக்கு வர, கிளென் மேக்ஸ்வெல் ஓரிடம் முன்னேறி 5-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

Label