OUR CLIENTS
மிஸோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
மிஸோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது Posted on 28-Nov-2018 மிஸோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

மிஸோரம் மாநிலத்தில் 40 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
மிஸோரத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. காங்கிரஸுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சியான மிஸோ தேசிய முன்னணி, மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பாஜக 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதுதவிர இதேபோல், பிராந்தியக் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணியான ஸோரம் மக்கள் இயக்கம் சார்பில் 35 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 
இங்கு மொத்தம் 7 லட்சத்து 70 ஆயிரத்து 395 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 897 பேர் பெண்கள். மொத்தம் 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைத்துத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மிஸோரம் முதல்வர் லால் தன்ஹாவ்லா மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் களமிறங்கியுள்ளார். ஆனால், மிஸோரம் வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்தது இல்லை. 
கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் 35 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்தது. மிஸோ தேசிய முன்னணி 4 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஓரிடத்திலும் வெற்றி பெற்றனர். எனினும், அப்போது காங்கிரஸுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால், பாஜகவுக்கு ஒரு சதவீத வாக்கு கூட கிடைக்கவில்லை. மிஸோரத்தில் இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. 

Label