OUR CLIENTS
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் புவனேஸ்வரில் கோலாகலத் தொடக்கம்
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் புவனேஸ்வரில் கோலாகலத் தொடக்கம் Posted on 28-Nov-2018 உலகக் கோப்பை ஹாக்கி தொடர் புவனேஸ்வரில் கோலாகலத் தொடக்கம்

14-வது உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. 
உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் தொடக்க விழா புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
1975ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் வரவழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஷாருக் கான், தனது தந்தை ஒரு ஹாக்கி வீரர் என்பதால், சிறுவயது முதலே தனக்கு இந்த விளையாட்டில் ஈடுபாடு உண்டு என்றார்.
புவிப் பாதுகாப்பை மையமாகக் கொண்ட பாடலுக்கு நடிகை மாதுரி தீட்சித் நடனமாடியபோது அரங்கம் அதிர்ந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தில் சே, ஹம்மா ஹம்மா, ஜெய் ஹோ போன்ற பாடல்களைக் கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியையொட்டி கலிங்கா மைதானம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, இங்கிலாந்து, கனடா அர்ஜெண்டினா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி 16ந் தேதி வரை நடைபெற உள்ளது.

Label