OUR CLIENTS
2.O திரைப்படத்திற்கு செல்போன் ஆப்பரேட்டர்கள் எதிர்ப்பு - தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரிக்கை
2.O திரைப்படத்திற்கு செல்போன் ஆப்பரேட்டர்கள் எதிர்ப்பு - தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரிக்கை Posted on 28-Nov-2018 2.O திரைப்படத்திற்கு செல்போன் ஆப்பரேட்டர்கள் எதிர்ப்பு - தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரிக்கை

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2 பாய்ண்ட் ஓ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில், மிகப் பிரமாண்டமாக 2 பாய்ண்ட் ஓ திரைப்படம் தயாராகியுள்ளது. சுமார் 450 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஏற்கெனவே, படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தில் செல்போன்கள் குறித்த காட்சிகளும், வசனங்களும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
படத்தில் செல்போன்கள் பயன்பாட்டை தவறாக சித்திரித்துள்ளதாகக் கூறி, செல்போன் சேவை நிறுவனங்கள், மத்திய தணிக்கைத்துறையிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எவ்வித ஆதாரமும் இன்றி 2 பாய்ண்ட் ஓ திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரில் செல்போன்கள் பயன்பாடு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும், அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு எதிரான கருத்தைக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ள செல்போன் சேவை நிறுவனங்கள், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் புகார் மனு அனுப்பியுள்ளன. மேலும் படத்திற்கான தணிக்கை சான்றிதழை ரத்து செய்து மறுதணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Label