OUR CLIENTS
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்!
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்! Posted on 29-Nov-2018 விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்!

பூமியை துல்லியமாக கண்காணிக்கும் இந்தியாவின் ஹெச்.ஒய்.எஸ்.ஐ.எஸ். என்ற செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட், 31 வியாழக்கிழமை (நவ. 29) காலை 9.58 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 
 ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து அந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. அதற்கான 28 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று புதன்கிழமை அதிகாலை தொடங்கியது. நிகழாண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்படும் 6-ஆவது ராக்கெட் இது.
அமெரிக்காவின் 23 செயற்கைக்கோள்களும், செயற்கோள் முழுவதும் இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் ஹெச்.ஒய்.எஸ்.ஐ.எஸ். செயற்கைக்கோள் மற்றும் ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, ஃபின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய 8 நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோள் என 30 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி 43 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 
இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ஹெச்.ஐ.எஸ்.ஒய்.எஸ். செயற்கைக்கோளானது புவி மேற்பரப்பைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். அதன் வாயிலாக, வேளாண் நிலப் பரப்பு, வனவளம், புவிசூழல், கடலோரப் பகுதிகள், உள்நாட்டு நீராதாரங்கள் ஆகியவை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இந்த செயற்கைக்கோளில் உள்ள அதிநவீன சாதனங்கள், தேவையான விவரங்களை நிழற்படங்களாக புவிக்கு அனுப்பும் திறன் கொண்டவை.
ஆயுள்காலம்: சுமார் 380 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். சூரிய சுற்று வட்டப் பாதையில் 630 கிலோ மீட்டர் தொலைவில் அதனை நிலை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பிற செயற்கைக்கோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட உள்ளன. பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்டானது நான்கு நிலைகளில் அந்த செயற்கைக்கோள்களைப் பிரித்து விண்ணில் நிலை நிறுத்தும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரோவின் தயாரிப்பில் உருவான பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டின் 45-ஆவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Label