OUR CLIENTS
மேக்கேதாட்டுவில் அணை விவகாரம்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது
மேக்கேதாட்டுவில் அணை விவகாரம்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது Posted on 29-Nov-2018 மேக்கேதாட்டுவில் அணை விவகாரம்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது

மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது. 
தமிழக விவசாயத்துக்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநிலத்துக்கு மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையியிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
இந்தக் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 
மேலும், திராவிட கழகம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகளிகளும் பங்கேற்றுள்ளனர். 

Label