OUR CLIENTS
செங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு கடுமையாக விலை உயர வாய்ப்பு?
செங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு கடுமையாக விலை உயர வாய்ப்பு? Posted on 29-Nov-2018 செங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு கடுமையாக விலை உயர வாய்ப்பு?

தாராபுரம், நவ.29-

தொடர் மழை மற்றும் வேலை ஆள்கள் இல்லாததால் தாராபுரம் பகுதியில் உள்ள சேம்பர் மற்றும் சூளைகளில் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல் விலை உயர வாய்ப்புள்ளதாக சேம்பர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாரத்தில், தாராபுரம், கொண்டரசம்பாளையம், திருமலைபாளையம், தளவாய்ப்பட்டினம், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட சேம்பர்களும், 130க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளும் இயங்கி வருகின்றன. இதன்மூலம் தினசரி 40 லட்சம் செங்கல்கள் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த செங்கல்கள் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், திருப்பூர், கோவை, பல்லடம் ஆகிய  பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. 
இந்த சேம்பர் (நவீன கருவிகளுடன் செயல்படுவது) மற்றும் சூளைகளில் (விறகு பயன்படுத்தி உற்பத்தி செய்வது) மதுரை, கடலூர், ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஒரு லோடு செங்கல் (5,000 எண்ணிக்கை கொண்டது) ரூ.30 ஆயிரம் வரை விற்பனையாகிறது. சில்லறை விலையில் ஒரு செங்கல் ரூ.7 வரை விற்பனையாகிறது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் செங்கல் லோடு அனுப்பப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முன் தாராபுரம் பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு போனஸ் மற்றும் முன்பணம் பெற்று சொந்த ஊருக்குச் செல்லும் தொழிலாளர்கள் இந்த ஆண்டு பணியின்மையால் ஊதியம் கூட பெறமுடியாமல் தவித்தனர். 
தற்போது தீபாவளிப் பண்டிகை முடிந்து வழக்கம்போல் செங்கல் உற்பத்தி துவங்கியிருக்க வேண்டிய நிலையில் புயல் காரணமாக தாராபுரம் பகுதியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் சேம்பர் மற்றும் சூளைகளில் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் செங்கல்கள் மழையால் சேதமடைந்துவிட்டன. இதனால் தாராபுரம் பகுதியில் கட்டுமானப் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

Label