OUR CLIENTS
திருச்சியில் டிசம்பர் 4-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்- அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு முக ஸ்டாலின் அறிவிப்பு
திருச்சியில் டிசம்பர் 4-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்- அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு முக ஸ்டாலின் அறிவிப்பு Posted on 29-Nov-2018 திருச்சியில் டிசம்பர் 4-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்- அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு முக ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:-
   
மேகதாது அணை தொடர்பாக திருச்சியில் டிசம்பர் 4-ந்தேதி திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் திமுகவின் தோழமை கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டம் தொடங்கியதும் கஜா புயலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் திமுக தலைவர் முக ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘திருச்சியில் டிசம்பர் 4-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் கலந்து கொள்ளும்’’ என்றார். 
மேலும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Label