OUR CLIENTS
இலங்கை கடற்படை அட்டூழியம்: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு
இலங்கை கடற்படை அட்டூழியம்: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு Posted on 29-Nov-2018 இலங்கை கடற்படை அட்டூழியம்: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். 
ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். இவர்களில் ஒருதரப்பினர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். மேலும் மீனவர்களை தாக்கியதோடு அவர்கள் வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வேலாயுதம் படகை ரோந்து கப்பலால் மோதச்செய்து சேதப்படுத்தினர். இதில் படகில் தண்ணீர் புகுந்து மூழ்கியது. இதையடுத்து எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் வேர்க்கோட்டைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் படகில் வந்த ராமு (வயது45), காட்டு ராஜா (50), தங்கவேல் (42), முருகன் (30) ஆகிய 4 மீனவர்களை சிறைபிடித்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.

Label