OUR CLIENTS
என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன்: ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்
என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன்: ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் Posted on 29-Nov-2018 என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன்: ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்

தன்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களை நம்பி விட்டுச் செல்வதாக ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். 
ரயில்வே காவல்துறை மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அவருக்கு சென்னை அயனாவரத்தில் பிரிவு உபசரிப்பு விழா இன்று நடைபெற்றது.
அதில் பேசிய அவர்,
என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன். குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை மதிக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்ய போலீசார் பயப்பட தேவையில்லை, நீதிமன்றத்தின் வழக்கிற்கு மட்டும் பயந்தால் போதும். 
எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டவுடன் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்கு ஓடி விடுகிறார்கள், ஒரு வேளை ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் வேறு வழியில்லாமல் கைது செய்ய வேண்டியதாகி விடுகிறது. 
நம் மண்ணுக்கேற்ற சட்டங்கள் இங்கு இல்லை. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் ரயில்வே போலீசார் வாக்குமூலம் வாங்கினால் செல்லும். வேலையில் இருக்கும் நல்லது, கெட்டதுகளை ஏற்கும் மனநிலைக்கு ரயில் போலீசார் வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Label