OUR CLIENTS
இன்று பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோவுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்
இன்று பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோவுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டம் Posted on 30-Nov-2018 இன்று பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோவுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைத்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label