OUR CLIENTS
ஜி 20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் சந்திப்பு
ஜி 20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் சந்திப்பு Posted on 30-Nov-2018 ஜி 20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி  சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் சந்திப்பு

பியூனோஸ் ஏர்ஸ்:-
 ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாநாடு நடப்பதற்கு முன்பாக சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்தார். 
இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகளின் பல அம்சங்கள் குறித்து விவாதித்தனர். மேலும் பொருளாதார உறவு, கலாச்சாரம் மற்றும் எரிசக்தி துறையில் உறவை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். 
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடனான சந்திப்பு பயனுள்ள வகையில் அமைந்தது. இந்தியா - சவூதி அரேபிய இடையேயான உறவுகள் மற்றும் பொருளாதாரத்தை மேலும் ஊக்கப்படுத்துதல் கலாச்சாரம் மற்றும் எரிசக்தி துறை ஊக்கப்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினோம் என்று தெரிவித்துள்ளார். 
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்தனர். கடந்த இரண்டு மாதங்களில் அன்டோனியோ குட்டெரெஸை இரண்டாவது முறையாக சந்தித்து பேசியுள்ளார் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதைத் தொடர்ந்து ரஷியா-இந்தியா-சீனா முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் மோடியுடன், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.
அமெரிக்கா-ஜப்பான்-இந்தியா முத்தரப்பு பேச்சு நடைபெறுவது இது முதல்முறையாகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள ரஷியா-இந்தியா-சீனா முத்தரப்பு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
இருநாள்கள் (நவம்பர் 30, டிசம்பர் 1) நடைபெறும் ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிரதமர் நாடு திரும்புகிறார்.

Label