OUR CLIENTS
மேக்கேதாட்டு அணை: வரைவுத் திட்ட அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
மேக்கேதாட்டு அணை: வரைவுத் திட்ட அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு Posted on 30-Nov-2018 மேக்கேதாட்டு அணை: வரைவுத் திட்ட அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புது தில்லி:-

 மேக்கேதாட்டு அணைக்கான வரைவு அறிக்கைக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் மனு மீது முடிவெடுக்கும்வரை, அணை கட்டும் பணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு திட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக எந்த நடவடிக்கையையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
 

Label