OUR CLIENTS
ஏடிஎம்மில் செக்கையும் மாற்றிக் கொள்ளலாம்!
ஏடிஎம்மில் செக்கையும் மாற்றிக் கொள்ளலாம்! Posted on 30-Nov-2018 ஏடிஎம்மில் செக்கையும்  மாற்றிக் கொள்ளலாம்!

பெரம்பூர், நவ.30-

பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும் ஏடிஎம் இயந்திரத்தில் இனி காசோலையை செலுத்தி பணம் பெறும் வசதி அறிமுகமாகியுள்ளது.
செக்கை ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்தி உடனே பணம் பெறும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள 'லைவ் டெல்லர்' இணைப்பை பெற வேண்டும். ஏடிஎம்மின் ஒரு பட்டனை அழுத்தி, இந்த இணைப்பை பெறலாம். இதையடுத்து உடனே ஏ.டி.எம். இயந்திரத்தின் முழு கட்டுப்பாடும் வங்கி அலுவலரிடம் வந்து விடும். அவர் அனுமதி அளித்ததும், ஏ.டி.எம்மில், காசோலையை செலுத்த வேண்டும். பின்னர் ஏதாவது ஒரு அடையாளச் சான்றை, அந்த இயந்திரத்திலேயே ஸ்கேன் செய்து அளிக்க வேண்டும். இந்த நடைமுறை முடிந்ததும் ஏ.டி.எம். மானிட்டர் திரை மீது வாடிக்கையாளர் கையொப்பம் இட வேண்டும். இதை இயந்திரம் பரிசீலித்து ஒரு நிமிடத்திற்குள் பணம் வழங்கும். மேலும் இந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் டெபிட் கார்டு இல்லாமல் ஆதார் எண்ணை தெரிவித்து ரொக்கம் பெறும் வசதி, பணம் டெபாசிட் செய்வதற்கும் தன் விபரங்களை புதுப்பிப்பதற்கும் வசதி உள்ளது. டில்லி ஹரியானா எல்லையில் உள்ள குருகிராம், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு ஆகிய இடங்களில் இந்த நவீன ஏ.டி.எம்.,கள் நிறுவப்பட்டுள்ளன. விரைவில் நாட்டின் முக்கிய நகரங்களில் இவ்வகை இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

Label