OUR CLIENTS
இலங்கையில் இரு போலீசார் சுட்டுக்கொலை - கருணா மீது குற்றச்சாட்டு
இலங்கையில் இரு போலீசார் சுட்டுக்கொலை - கருணா மீது குற்றச்சாட்டு Posted on 30-Nov-2018 இலங்கையில் இரு போலீசார் சுட்டுக்கொலை - கருணா மீது குற்றச்சாட்டு

கொழும்பு:-
    
இலங்கையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதில் விடுதலைப் புலிகள் முன்னாள் துணை தலைவர் கருணா மீது தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. 
இலங்கையின் பட்டிக்கோலா மாவட்டத்தில் உள்ள வவுனத்தீவு பகுதியில் நேற்றிரவு நான்கு போலீசார் சாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு போலீசார் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர், மற்றொருவர் சிங்களர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த கொலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னாள் துணை தலைவராக இருந்த கருணா மீது தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
2010-15 ஆண்டுகளுக்கிடையில் ராஜபக்சே தலைமையிலான முந்தையை அரசில் மந்திரியாக இருந்த கருணா கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதியில் இருந்து சமூக வலைத்தளங்களில் ராஜபக்சேவை ஆதரித்து மிகவும் துடிப்பாக தற்போது செயல்பட்டு வருவதால் இந்த கொலையில் கருணாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தி தொடர்பளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Label