அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபள்யூ.புஷ் காலமானார் Posted on 01-Dec-2018
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் (94) வெள்ளிக்கிழமை இரவு காலமானார். ஹௌஸ்டனில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இத்தகவலை ஜார்ஜ் ஹெச்.டபள்யூ.புஷ் செய்தித்தொடர்பாளர் ஜிம் மெக்ரத் தெரிவித்தார். அவருடைய மனைவி பார்பரா புஷ் (73) இறந்து சரியாக 8 மாதத்துக்குள்ளாக புஷ் மரணமடைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்க கப்பல்படையில் கடந்த 1944-ல் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். பின்னர் 1989 முதல் 1993 வரை மிக நெருக்கடியான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக பதவி வகித்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் ஆவார். தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தவர். இடையில் 1980 முதல் இருமுறை அமெரிக்க துணை அதிபராகவும் இருந்துள்ளார்.