OUR CLIENTS
இந்தியா, சீனா இடையிலான உயர்மட்ட ஒப்பந்தம்: ஜி20-யில் இருநாடுகளும் ஒப்புதல்
இந்தியா, சீனா இடையிலான உயர்மட்ட ஒப்பந்தம்: ஜி20-யில் இருநாடுகளும் ஒப்புதல் Posted on 01-Dec-2018 இந்தியா, சீனா இடையிலான உயர்மட்ட ஒப்பந்தம்: ஜி20-யில் இருநாடுகளும் ஒப்புதல்

இந்தியா மற்றும் சீனா இடையிலான உயர்மட்ட ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளின் தலைவர்களும் ஜி20 மாநாட்டில் ஒப்பந்தம் ஏற்படுத்தினர்.
ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில், நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷியா, இந்தியா உள்ளிட்ட பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. 
சீனாவுடன் இருதரப்பு உறவு, நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை இந்த மாநாட்டின் போது மோடி சந்தித்தார். கடந்த 7 மாதங்களில் நான்காவது முறையாக இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.
அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்பட்டும், நம்பகத்தன்மையுடன் வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சர்வதேச அளிவலான வளர்ச்சி மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ற மாதிரி நிலையான உறவாக இது அமைய வேண்டும் எனவும் இரு நாடுகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும், இந்தியா மற்றும் சீனா இடையே உயர்மட்ட ஒப்பந்தம் தொடர்பாகவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

Label