OUR CLIENTS
உலக கோப்பை ஹாக்கி- இந்திய அணிக்கு 2-வது வெற்றி கிடைக்குமா? பெல்ஜியத்துடன் நாளை மோதல்
உலக கோப்பை ஹாக்கி- இந்திய அணிக்கு 2-வது வெற்றி கிடைக்குமா? பெல்ஜியத்துடன் நாளை மோதல் Posted on 01-Dec-2018 உலக கோப்பை ஹாக்கி- இந்திய அணிக்கு 2-வது வெற்றி கிடைக்குமா? பெல்ஜியத்துடன் நாளை மோதல்

புவனேஷ்வர்:-    

உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. 
உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் விளையாடும் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை நாளை (2-ந்தேதி) எதிர்கொள்கிறது.
இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. பெல்ஜியம் அணி தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி இருந்தது. இந்திய அணி மோதும் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மற்றொரு ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென்ஆப்பிரிக்கா- கனடா அணிகள் மோதுகின்றன.
நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை (‘பி’ பிரிவு) வீழ்த்தியது. இங்கிலாந்து- சீனா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நெதர்லாந்து-மலேசியா (மாலை 5 மணி), ஜெர்மனி- பாகிஸ்தான் (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.

Label