OUR CLIENTS
பேட்ட படத்தின் முதல் பாடல்: டிசம்பர் 3-ல் வெளியாகிறது!
பேட்ட படத்தின் முதல் பாடல்: டிசம்பர் 3-ல் வெளியாகிறது! Posted on 01-Dec-2018 பேட்ட படத்தின் முதல் பாடல்: டிசம்பர் 3-ல் வெளியாகிறது!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை - அனிருத். பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். 
டிசம்பர் 9 அன்று பாடல்கள் வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் வரும் திங்கள் அன்று இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகிறது. அடுத்ததாக 7-ம் தேதி 2-வது பாடல் வெளியிடப்படுகிறது. இதனால், முழுப் பாடல்களின் வெளியீட்டுக்கு முன்பு இரு பாடல்கள் வெளியாகவுள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Label