OUR CLIENTS
திண்டுக்கல் அருகே கள்ளச்சாராயம் அருந்திய இருவர் பலி - ஒருவர் கவலைக்கிடம்
திண்டுக்கல் அருகே கள்ளச்சாராயம் அருந்திய இருவர் பலி - ஒருவர் கவலைக்கிடம் Posted on 05-Dec-2018 திண்டுக்கல் அருகே கள்ளச்சாராயம் அருந்திய இருவர் பலி - ஒருவர் கவலைக்கிடம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் ஜெயச்சந்திரன் என்ற நபர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இவனிடம் அதே பகுதியைச் சேர்ந்த முருகன், சாய்ராம், தங்கபாண்டி ஆகிய மூவரும் அதிகாலையிலேயே சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர். சில நிமிடங்களிலேயே மூவரும் மயக்கமுற்று விழுந்த நிலையில், மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியிலேயே முருகனும் சாய்ராமும் இறந்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தங்கபாண்டி, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். பள்ளப்பட்டி பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாகக் கூறும் கிராம மக்கள், போலீசார் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே கள்ளச்சாராயம் விற்றுவந்த ஜெயச்சந்திரன் தலைமறைவாகியுள்ளான். அவனை தேடும் பணியை அம்மையநாயக்கனூர் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Label